ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில் முதல்முறையாக "வைபை கிளினிக்" அறிமுகம்

ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புற்றுநோய் சிகிச்சையை மேலாண்மை செய்ய அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது பொதுமக்களிடையே புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த முதல் முறையாக “வை-பை கிளினிக்”  ஒன்றை இன்று துவக்கியுள்ளது என ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் மருத்துவர் குகன் தெரிவித்தார்.



இங்கு நிறுவப்பட்டுள்ள வைபை கிளினிக் மோடம் மூலம், இங்கு வரும் நோயாளிகள், அவரது உதவியாளர்கள் அனைத்து புற்றுநோய் தொடர்பான விபரங்களை அறிய முடியும். இவர்கள் தங்களது மொபைல் போனில், வைபை-யை ஆன் செய்தால், வைபை கிளினிக் தானாகவே இணைக்கப்பட்டு, அதன் தேடுதளங்களான கூகுள் க்ரோம், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அல்லது எதுவாக இருந்தாலும், ஏ.காம் என்ற இணையத்தளத்தின் உதவியோடு தகவல்களை பெறலாம்.



இந்த வைபை கிளினிக்கில், புற்றுநோய் வகைககள் பற்றிய தகவல்கள் வரிசைப்படி அமைக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் எங்களது துறையை பற்றியும், ஆலோசனை வழங்குபவரின் அனுபவம் பற்றியும் இடம் பெற்றிருக்கும்.

லீனியர் ஆக்சலரேட்டர், பெட்சிடி படங்கள், சிகிச்சை அளிக்க உள்ள வசதிகள் மற்றும் பிற புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன. தீபம் என்ற புற்றுநோய் பரிசோதனை முகாம் விபரங்களும் உள்ளன. ஆன்லைனில் முன்பதிவு செய்யவும், இ-மெயில் முகவரியும் இதில் பெறலாம். எனவே இந்த மையத்துடன் டிஜிட்டல் வழி தொடர்புகளை ஏற்படுத்தப்படுகிறது.

இந்த மையம் வெளியிட்டுள்ள கையேட்டில், அனைத்து வகையான புற்றுநோய், தலை, கழுத்து, மார்பகம், கருவாய், புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள், நேரம் மற்றும் உணவு கட்டுப்பாடு முறைகள் இடம் பெற்றுள்ளன. மார்பக புற்றுநோய், கர்ப்பபை வாய் மற்றும் வாய் புற்றுநோய் போன்றவைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுகள், தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கையேடுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் கேன்சர் தகவல்கள் மற்றும் அனைத்து புற்றுநோய் விழிப்புணர்வு இ-புத்தகங்கள் உள்ளன. பல்வேறு வகையான புற்றுநோய் சிகிச்சைகளுக்கு, மருத்துவ, அறுவை மற்றும் கதிவீச்சு சிகிச்சை வாய்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மருத்துவர் ஆலோசனையின்போது, இது பல்வேறு சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். அதோடு, மருத்துவர்களின் ஆலோசனையின்படி, சிகிச்சை செய்ய மனதளவில் இது தயார் செய்யும்.

ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மற்றுமொரு மைல்கல்லாக இந்த “வை-பை” கிளினிக் திகழ்வதோடு, நோயாளிகளுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும். இதை, எஸ்என்ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் விஜயக்குமார் துவக்கி வைத்தார். ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் பி.குகன், மருத்துவமனை டீன் சுகுமார், கதிர்வீச்சியல் அறுவை சிகிச்சை டாக்டர் கே.கார்த்திகேஷ் உள்ளிட்டோர் இதன் துவக்க விழாவில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...